சென்னை: தமிழ் மொழி மீது இந்தியை திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ் மொழி பேசும் பனாரஸ் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். 'தமிழ்நாடு தர்ஷன்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேலும், இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ் இல்லாமல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
இதைத்தவிர்த்து, இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருப்பதாகவும் தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு என்றும் குறிப்பிட்டார். எனவே தமிழை ஆழமாகப் படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago