திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டத்துபட்டி ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மோதல் போக்கு காரணமாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு வார்டு உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராம ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சித்தலைவராக வேல்கனி உள்ளார். துணைத்தலைவராக விசுவாசம் உள்ளார்.
ஊராட்சித்தலைவர் முறையாக கூட்டம் நடத்தி, ஊராட்சியில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதில்லை. கிராம மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளை மேற்கொள்ளவில்லை, ஊராட்சி நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறி வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் வந்த வார்டு உறுப்பினர்கள் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு விட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ரெட்டியார்சத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலைசாமி, வேதா ஆகியோர் குட்டத்துப்பட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago