நாய்களால் விபத்து ஏற்பட்டால் உரிமையாளர்தான் பொறுப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை: நாய்களால் விபத்து ஏற்பட்டால், அவற்றை வளர்க்கும் உரிமையாளர்தான் பொறுப்பு என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிவகங்கை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை நகரில் தெருக்களில் அதிகளவில் நாய்கள் உள்ளன. மேலும் அவை நடந்து செல்வோரை கடிக்கின்றன. நாய்களால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆனால் நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், நகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களை பெற்றுள்ளார்.

அதில் சிவகங்கை நகராட்சியில் 650-க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளதாகவும், நாய்களுக்கு கருத்தடை செய்ய, கடந்த ஆண்டு ஏப்.29-ம் தேதி ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டு, இதுவரை கருத்தடை செய்யவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாய்கள் மூலம் நடந்து செல்வோருக்கும், வாகனத்தில் செல்வோருக்கும் விபத்து ஏற்பட்டால், நாய்களின் உரிமையாளர்களே பொறுப்பு எனவும், ஆனால் இதுவரை நாய்களால் ஏற்பட்ட விபத்துகளில் நாய்களின் உரிமையாளர்கள் மீது காவல்நிலையங்களில் வழக்கு பதியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், நகராட்சியில் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை. இதனால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நாய்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் நாய்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்படுவதில்லை. நாய்களை கட்டுப்படுத்தி விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்