“உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை அரசு ஒழிக்க வேண்டும்” - தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: “நீதிமன்ற உத்தரவுப்படி போலி மருத்துவர்கள் மீது பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குகள் பதிவு செய்து 70-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுகின்றோம் என்று பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல் உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் இரண்டு ஆபரேஷன்களை போலீசார் மேற்கொண்ட போதும் இன்னும் கூட கஞ்சா விற்பனையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

எனவே, இனி பெயரளவுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இல்லாமல், மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்'' டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்