புதிய வகை தொற்றால் ஆபத்து இல்லை; பாதிப்பு உயர்ந்தால் முகக் கவசம் கட்டாயமாக்கப்படும்: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பரவும் ஒமைக்ரானின் புதிய வகை தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தினசரி பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பொது இடங்களில் முகக் கவசம்கட்டாயம் ஆக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கரோனா பரவல் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேற்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசியபோது, ‘‘நாடு முழுவதும் கரோனா தொற்று அதிக அளவில் பரவுகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 400-ஐ நெருங்கியுள்ளது.

நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவிலும் வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக தகவல் வருகிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்துவதுடன், வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். முகக் கவசம் அணிவது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்) பேசும்போது, ‘‘தமிழகத்தில்திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டது. உருமாறியகரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்கிறது. பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பிறகு, ஜி.கே.மணி (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோரும் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தற்போது கரோனா பாதிப்பு தேசிய அளவில் 5,878, தமிழகத்தில் 386 என உயர்ந்துள்ளது. கரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.

மருத்துவமனையில் தொற்றுஎளிதாக பரவும் என்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் தற்போது முகக் கவசம் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 500 அல்லது 1,000 என்றுவந்தால், பொது இடங்கள், சமூக,சமுதாய, அரசியல் நிகழ்வுகளில்முகக் கவசத்தை கட்டாயமாக்கலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரானின் புதிய வகை மற்றும் பிஏ2 வகைவைரஸ்கள் பரவுகின்றன. இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பாதிப்பாக இல்லை. தொண்டை வலி,காய்ச்சல், உடல் வலி என்ற அளவிலேயே உள்ளது. மருத்துவமனையில் யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற நிலை ஏற்படவில்லை.

தேவை ஏற்பட்டால் 24 மணி நேரத்துக்குள் 1.48 லட்சம் படுக்கைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினசரி 3 லட்சம் பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் வகையில் 342 இடங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55 ஆயிரம் பேர் கரோனா நிதியுதவி பெற்றுள்ளனர். கரோனா எந்த உருமாறி வந்தாலும் தமிழர்களை முதல்வர் காப்பார். அதற்குரிய கட்டமைப்புகள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்