தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளில் என்சிசி மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்சிசி மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 2023-2024-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த என்சிசி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளில் (காவலர், சப்-இன்ஸ்பெக்டர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணியாளர் தேர்வுகள்) என்சிசி ‘ஏ’ சான்றிதழ் வைத்திருப்போருக்கு அரை மதிப்பெண்ணும், ‘பி’ சான்றிதழ் இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் ‘சி ’சான்றிதழ் இருப்பின் 2 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு வாய்மொழித் தேர்வில் வழங்கப்படும் 12 மதிப்பெண்களில் என்சிசி செயல்பாடுகளுக்காக மாணவர்களுக்கு அரை மதிப்பெண் வழங்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் என்சிசி படை பயிற்சிக்கு (பரேடு) ஒரு மாணவருக்கு ஒரு மணி நேர அணிவகுப்புக்கு வழங்கப்படும் உணவுத்தொகை ரூ.10-லிருந்து ரூ.25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்