தமிழகத்தில் 400-ஐ தாண்டிய கரோனா பாதிப்பு - ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இன்று ஒரேநாளில் 401 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 215 பேர், பெண்கள் 186 பேர்.

அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலத்தில் 23 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளான சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே இன்று தொற்று பாதிப்பு பதிவாகவில்லை. இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். நேற்று செங்கல்பட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்