ஈரோடு: அதிமுக – பாஜக இடையே முரண்பாடு இல்லை, என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைவிண்ணப்பப் படிவம் வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல அதிமுகவை பொதுச்செய லாளர் பழனிசாமி சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். தற்போது அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில், 3.50 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும். அடுத்தாண்டு நடக்கும் மக்களவைத் தேர்தல் திருப்பு முனையாக அமையும். 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அசைக்க முடியாத சக்தியாக விளங்கி ஆட்சி அமைக்கும்.
தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அதிமுக - பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக, பிரதமர்- பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை. பிரதமரை எங்கு எப்போது சந்திக்க வேண்டுமோ, அப்போது பொதுச்செயலாளர் பழனிசாமி சந்திப்பார், என்றார்.
» சென்னை | சிறப்பு முகாம்களில் ரூ.18 கோடி அளவில் சொத்து வரி வசூல்
» ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago