சென்னை: சென்னை பெருநகரின் முதல் பெருந்திட்டம் கடந்த 1976-ம்ஆண்டும், 2-வது பெருந்திட்டம் கடந்த 2008-ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் 1,189 சதுர கி.மீ. பரப்பிலான சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது பெருந்திட்டத்தை (2026-2046) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தயாரிக்க உள்ளது. இத்திட்டம் வரும் 2026-ம் ஆண்டு முதல்செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
3-வது பெருந்திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரின் 29 மண்டலங்களில் உள்ள எம்எல்ஏக்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி,அவர்களது கருத்துகள், விருப்பங்கள் பெறப்படுகின்றன.
இதற்காக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, ரயில், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், திரையரங்குகள், வணிகவளாகங்கள், அரசு அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும், வலைதளங்கள் மூலமாகவும்கருத்து கேட்கும் முயற்சியைசிஎம்டிஏ மேற்கொண்டுள்ளது.
க்யூஆர்கோடு, இணையதளம்: அதன் தொடர்ச்சியாக, மெரினாகடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, சென்னை பெருநகர 3-வதுபெருந்திட்ட தொலைநோக்குஆவண விழிப்புணர்வு கையேட்டைபொதுமக்களிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார்.
» ஒடிசாவில் சைபர் மோசடியில் பணத்தை இழந்த மனைவியை ‘முத்தலாக்' செய்த கணவர் மீது வழக்குப் பதிவு
அவர் கூறும்போது, ‘‘பெருவாரியான மக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை வழங்கும் விதமாக, தற்போது விழிப்புணர்வு கையேடு வழங்கப்படுகிறது. 3-வது பெருந்திட்டம் தொடர்பான தங்கள் கருத்துகளை க்யூஆர்கோடு (QR Code) மூலமாகவும், இணையதளம்வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
இதற்கான ஆங்கில படிவத்தை https://forms.gle/1SaapSDXXyyAmbBK7 தளத்திலும், தமிழ் படிவத்தை https://forms.gle/4cQVYKFekpia4upr9 தளத்திலும் பூர்த்தி செய்யலாம். www.cmavision.in என்ற இணையதளத்திலும் கருத்துகளை தெரிவிக்கலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago