புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் கரோனா தொற்று மிரட்டத் துவங்கியுள்ளது. அங்கு புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
புதுவையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சுகாதாரத்துறையும் கரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று புதுவை மாநிலத்தில் 827 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில் புதுவையில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேயில் 2 பேர் என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என மொத்தம் 9 பேர் மருத்துவமனையிலும், 262 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 15 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது ஜிப்மரில் ஒருவரும், கோரிமேடு மார்பக மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேரும் சிகிச்சயைில் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் கடந்த சில தினங்களாக கரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனால், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் யாரும் முகக்கவசம் அணிவதை அரசு தரப்பில் கண்டுகொள்ளாத போக்கும் நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago