சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் மற்றும் ரூ.4,000 கோடியில் சாலைகள் உள்ளிட்ட புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயர்ந்துள்ளது. விமான நிலையத்தில் உள்ள வசதிகளை, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். இந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தபோது, விலகி நின்றுகொண்டிருந்த முதல்வர் ஸ்டாலினை தனது அருகில் அழைத்த பிரதமர் மோடி, ஸ்டாலின் கையைப் பிடித்து குலுக்கி, அருகிலேயே நிற்கும்படி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சைஓவியங்கள், காஞ்சிபுரம் சேலைகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் மாலையில் நடந்த விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
» பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
» தோட்டக்கலைத் துறையின் பண்ணை, பூங்கா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக: சீமான்
மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம் இடையே ரூ.851 கோடி மதிப்பில் 7.3 கி.மீ. தொலைவிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், ரூ.528 கோடியில் மதுரை நத்தம் - துவரங்குறிச்சி இடையிலான 24 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.1,077 கோடியில் திருமங்கலம் - வடுகபட்டி இடையிலான 36 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை, ரூ.1,328 கோடியில் வடுகபட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையிலான 35.6 கி.மீ. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.294 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை, தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியஅமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ்,ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு, நாடாளுமன்ற திமுக குழுதலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago