செங்கல்பட்டு: தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தப்படும் என ஏற்கெனவே அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 6 சதவீதம் அளவுக்கு சொத்துவரி உயர்த்தப்படவுள்ளது. இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படவில்லை. இதனைதொடந்து கடந்த ஆண்டு ஏற்பட்டவிலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு 25,50, 75 மற்றும் 100 என்ற சதவீதபடி சொத்து வரி உயர்த்தப்பட்டது. காலிமனை வரி மட்டும் 100 சதவீதம் உயர்த்தப் பட்டது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என அப்போதே அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் படி ஏப்ரல் முதல் தற்போது செலுத்தப்படும் சொத்துவரி மற்றும் காலிமனை வரி 6 சதவீதம் உயர்கிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சென்ற ஆண்டு வீட்டுவரி பன்மடங்கு உயர்த்தப்பட்டது. அதனைதொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்தது. தற்போது இந்த ஆண்டும் அதை செயல்படுத்தும் போது வாடகை வீட்டுக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு யோசித்ததாக தெரியவில்லை.
சகட்டு மேனிக்கு ஆண்டுதோறும் உயர்வு என்றால் ஒரு கட்டத்தில் முடியாத அளவில் இந்த வீட்டுவரி உயர்வு இருக்கும். தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் இந்த 6 சதவீத உயர்வை எதிர்க்க வேண்டும். முதல்வரிடம் எடுத்துச் சொல்லி இந்த வரி உயர்வை கைவிடச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago