சென்னை: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் என, 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள், 4,080 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. அதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி கட்டுமான ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசிடம் அனுமதி கோரியது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. எனினும் இது விசாரணைக்கு மட்டுமான அனுமதிதான் என்றும் தேவைப்பட்டால் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago