கரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி - உயர் நீதிமன்றத்தில் ஏப்.10 முதல் நேரடி, ஆன்லைன் கலப்பு விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையி்ல் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக கலப்பு முறையில் விசாரணை நடத்தப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

மறுஉத்தரவு வரை அமல்: இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்லைன் காணொலி காட்சி என இரண்டு முறையிலும் கலப்பு விசாரணை நடைபெறும்.

இந்த வசதியை வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் நேரடியாக ஆஜராகும்வழக்காடிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல வழக்குகளையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE