கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே பண்டப்பள்ளி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் அயர்னப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பண்டப்பள்ளி. இக்கிராமத்தின் வழியாக தென்பெண்ணை ஆறு செல்கிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வசிக்கும் இப்பகுதி மக்கள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கப்படும் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை சூளகிரி, ராயக்கோட்டை சந்தைகளுக்கு தினமும் ஆற்றினை கடந்து கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இச்சாலை முற்றிலும் துண்டிக்கப்படும். இதனால் கிராம மக்கள் பல கி.மீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சாலைகள் துண்டிப்பு: இதுகுறித்து அயர்னப்பள்ளி ஊராட்சியின் துணைத் தலைவர் குமார் மற்றும் கிராம மக்கள் கூறும்போது, அயர்னப்பள்ளி மற்றும் பங்கனஹள்ளி ஊராட்சியை இணைக்கும் சாலையின் குறுக்கே தென்பெண்ணை ஆறு செல்கிறது.
இவ்வழியே நாள்தோறும் மெட்டரை, பந்தாரப்பள்ளி, தோட்டம், பண்டப்பள்ளி, சுந்தரபுரம், கொத்தூர், சின்னபண்டப்பள்ளி, பங்கனஹள்ளி, கொத்தகுறுக்கி, கூலியம், உலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறு, குறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்படும்.
சிமென்ட் தரைப்பாலம்: இப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக உத்தனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்ல, ராயக்கோட்டைக்கு சென்று அங்கிருந்து உத்தனப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், தற்போது ஆற்றை கடந்து செல்ல, கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறிய அளவில் சிமென்ட் தரைப்பாலம் கட்டியுள்ளோம். அதிகளவில் தண்ணீர் செல்லும்போது தரைப்பாலம் சேதம் ஏற்படும், அதனை மீண்டும் சரி செய்து பயன்படுத்தும் நிலை உள்ளது. இங்கு மேம்பாலம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், இங்கு ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தென்பெண்ணை ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago