சிவகங்கை: “தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால், சிவகங்கை தொகுதியில் பாஜகதான் போட்டியிடும்” என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கையில் பாஜக நிறுவனத் தினத்தையொட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, நகரத் தலைவர் உதயா, முன்னாள் மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது: ''வாரந்தோறும் கிளைக் கூட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினை தெரிந்துகொள்ள வேண்டும். வீடுகள்தோறும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். உலகில் 23 ஆண்டுகள் தொடர்ந்து நிர்வாகத்தை ஆட்சி செய்யும் ஒரே அரசியல் தலைவர் மோடிதான். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும். அதனால் இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினரைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவராக்கியது பாஜக தான். மோடி அமைச்சரவையில் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். சமூக நீதியை பாஜகதான் காப்பாற்றி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் கேலிக்கூத்தாக சமூக நீதி மாநாட்டை நடத்தியுள்ளனர். அவர்களை மக்கள் மறந்துவிட்டனர். தாங்கள் இருப்பதை ஞாபகப்படுத்த மாநாட்டை நடத்தியுள்ளனர். தமிழக நிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து நல்ல எண்ணிக்கையில் பாஜகவுக்கு எம்பிகள் கிடைக்கும்.
தேர்தலில் நிற்பதற்கு திமுகவில் கையூட்டு வாங்கியவர் முத்தரசன். அவருக்குதான் பிரதமர் குறித்து பேச தகுதியில்லை. தமிழகத்தில் சுறுசுறுப்பான கட்சியாக பாஜக உள்ளது. நமது தொன்மை 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கீழடி அகழாய்வை அழமாகவும், அகலமாகவும் செய்தால் தான் அது தெரியவரும். ஆனால் ஆழம் குறைவாக அகழாய்வு செய்துவிட்டு 2,600 ஆண்டுகள் தான் முற்பட்டது என கூறி வருகின்றனர். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அண்ணாமலை வெளியிடுவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல மாற்றங்கள் வரும். அதன்பிறகு திமுக ஆட்சி எவ்வளவு காலம் என்பது தெரியவரும்.
» தி.மலை - கீழ்நமண்டியில் முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது
» “ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது” - கே.பாலகிருஷ்ணன்
ஏற்கெனவே மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் இணைந்து தான் நடைபெற்றன. அதை இந்திரா காந்தி தான் மாற்றினார். மேலும், மாநில ஆட்சியாளர்களின் ஸ்திரத் தன்மை இன்மையாலும் மாறியது. இனி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஓராண்டுக்குள் சாத்தியம் இருக்குமா என்பது தெரியவில்லை. பழனிசாமி ஒன்றாக தேர்தல் நடக்கும் என்று நம்புகிறார். நடந்தால் நல்லது. இந்தியாவின் சக்தியை அறியாதவர்கள் காங்கிரஸார். அதை புரிந்தவர் பிரதமர் மோடி. சிவகங்கை எம்பி யாரு என்றே எனக்கே மறந்துவிட்டது. மக்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும். எம்பிக்கே தொகுதி மறந்திருக்கும்” என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago