சென்னை மூவரசம்பட்டு கோயில் குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழப்பு: சட்டப்பேரவையில் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மூவரசம்பட்டு கோயில் குளத்தில் நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.6) செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டில் தீர்த்தவாரியின்போது குளத்தில் 5 பேர் இறந்ததற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE