சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தினசரி பரிசோதனைகள் எண்ணிக்கையை 11 ஆயிரமாக அதிகரிக்கவேண்டுமென பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது 200-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு 60-ஐ கடந்துள்ளது.
தமிழகத்தைப் போலவே பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு அறிவுறுத்தல்களை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 1-ம்தேதி முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணியுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் தற்போது தினமும் 3,000 எண்ணிக்கையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை 11 ஆயிரமாக உயர்த்தி மாவட்டம் தோறும்மக்கள் தொகைக்கு ஏற்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியில் குறைந்தது 1,080 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அவசியம்: இது தொடர்பாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜப்பான் போன்ற நாடுகளில் 2019-ம் ஆண்டுக்கு முன்பே, சுற்றுச்சூழலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக் கவசம் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே, முகக் கவசங்கள் அணிவதில் தவறில்லை. இதை கட்டாயப்படுத்தி, காவல்துறை நடவடிக்கை எடுத்து, அபராதம் விதித்து நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முகக் கவசங்கள் அவசியம் என்பதை உணர்ந்து, மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது மிகவும் நல்லது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago