மீத்தேன் திட்டம் - பழனிசாமி புகாருக்கு தங்கம் தென்னரசு பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மீத்தேன் திட்டம் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டம் வரை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த திட்டம் குறித்த கேள்வி வரும்போது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் திமுக ஆட்சி நிறைவேற்றாது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்குப் பிறகு, தமிழகத்தில் மீத்தேன் திட்டம் நிறைவேற் றப்படாது. அது ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். தன்னை பெரிய விவசாயி என்று கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் ஆட்சியில்தான், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுகவினர் எந்த அளவுக்குத் துடித்தனர் என்பதையும், அதை எதிர்த்து விவசாயிகள் பெரிய அளவில் போராடியதையும், அந்தப் போராட்டத்தை நசுக்குவதற்கு அதிமுக அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளையும், கைது நடவடிக்கைகளையும் அனைவரும் அறிவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்