விழுப்புரம் | அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த பிப்ரவரி 10-ம்தேதி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது தெரிய வந்தது.ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம்குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, குரங்குகளை வைத்து அச்சுறுத்தியது, பெண்களை பாலியல் வன் கொடுமை செய்தது, 15 பேர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இதைத் தொடர்ந்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தங்கள் வசம் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த அருள்மணி (48) என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் கடந்த 4-ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது சகோதரர் அருள்ஜோதி அளித்த புகாரின் பேரில் கெடார் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்