மதுரை: இலங்கை தமிழருக்கும், இந்திய பெண்ணுக்கும் பிறந்தவருக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் சகாயநாதன். இவர் இந்தியாவுக்கு 1990-ல் அகதியாக வந்து சிவகங்கை நாட்டரசன்கோட்டை முகாமில் தங்கினார்.
இவர் சிவகங்கையைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மேரி கிறிஸ்டியானாவை காதலித்து 2001-ல் சிவகங்கை தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் நியாசியஸ். இவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார்.
அவரது பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அது தொடர்பாக விளக்கம் கேட்டு பாஸ்போர்ட் அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரி நியாசியஸ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: உலகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இலங்கை தமிழர்கள் திரிசங்கு நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளேன். இலங்கை தமிழருக்கு இந்தியாவில் பிறந்த நளினிக்கும், பின்னர் ஹரினாவுக்கும் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டேன். இது 4-வது வழக்கு.
இதுபோன்ற வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வருவது எப்படி என பொதுவெளியில் பலர் பேசுகின்றனர். அவர்களுக்கு நீதித் துறையின் நடைமுறையை கற்பிக்க வேண்டியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டிய வழக்குகளை தலைமை நீதிபதியே முடிவு செய்கிறார்.
விசாரிக்க வேண்டிய வழக்கு வகைகள் ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். நான் கடந்த 6 ஆண்டுகளாக பொதுவான வழக்குகளை விசாரித்து வருகிறேன். அதனால் இலங்கை தமிழர்கள் தொடர்பான வழக்குகள் என்னிடம் விசாரணைக்கு வருகின்றன.
இந்த வழக்கில் மனுதாரர் 18.1.2002-ல் பிறந்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தில் 1987 ஜூலை 1-க்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோர் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இந்திய குடிமகன், குடிமகள்தான். குடியுரிமை சட்டத் திருத்தம் 3.12.2004ல் தான் அமலுக்கு வந்துள்ளது.
மனுதாரருக்கு இரு வழிகள் உள்ளன. அவரது தாயார் இந்திய குடியுரிமை பெற்றவர். மனுதாரர் கட்-ஆப் தேதிக்கு முன்பு பிறந்துள்ளார். இதனால் குடியுரிமை சட்டத்தின் முக்கிய அம்சத்தை நிறைவேற்றியுள்ளார். பிறப்புச் சான்றிதழில் இலங்கை அகதி என்றிருப்பது மனுதாரரின் தவறு இல்லை. அதிகாரிகள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். எனவே மனுதாரருக்கு 3 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago