ஆற்காடு: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு மாத்திரையை மாற்றி வழங்கியதால் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (27), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜெயபிரியா (22). தம்பதியருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. தற்போது, ஜெயபிரியா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இவர் வீட்டின் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் பரிசோ தனை மேற்கொண்டு வந்தார்.
கடந்த மார்ச் மாதம் ஜெய பிரியா வழக்கம்போல் மருத்துவ மனைக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த செவிலியர்பிரேமகுமாரியிடம் மாத்திரை, மருந்துகளை பெற்றுள்ளார். அதில், சத்து மாத்திரைக்கு பதிலாக பூச்சி மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதை அறியாமல், கடந்த 20 நாட்களாக ஜெயபிரியா மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும், அவர் மாத்திரை தீர்ந்து விட்டதால் கூடுதல் மாத்திரை வாங்க மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அங்கு பணியில் இருந்த செவிலியரிடம் அட்டையை காண்பித்து, மாத்திரையை வழங்குமாறு கேட்டுள்ளார். இது பூச்சி மாத்திரை. இதை ஏன் கேட்கிறீர்கள் என செவிலியர் தெரிவித்தார்.
» NZ vs SL | 2-வது டி20 கிரிக்கெட் போட்டி: ஆடம் மில்னேவின் வேகத்தில் சரிந்தது இலங்கை அணி
» ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஷுப்மன் கில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்!
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபிரியா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, விட்டமின் டி 3 மாத்திரைக்கு பதிலாக பூச்சி மாத்திரை மாற்றி வழங்கியது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் மருத்துவமனைக்கு வந்து பணியாளரிடம் நடத்திய விசாரணையில் மாத்திரை மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கர்ப்பிணிக்கு கவனக்குறைவாக மாத்திரை வழங்கிய செவிலியர் பிரேம குமாரியை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகா தாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆற்காடு நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago