சென்னை: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோரை கொண்ட தனி விசாரணை குழுவைகலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது.
சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் உட்பட4 பேர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அடையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியும் விசாரணை நடத்திஅரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் மாணவி ஒருவர்அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கலாஷேத்ரா பவுண்டேஷன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கலாஷேத்ரா பவுண்டேஷன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகிஉள்ள உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடனக் கலைஞர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரியில் உள்புகார் குழுமீண்டும் அமைக்கப்படும். கல்லூரிநிர்வாகத்தை பலப்படுத்தும் வகையில் புதிதாக மாணவர் ஆலோசகர் நியமிக்கப்படுவார். அத்துடன் சுதந்திரமான ஆலோசனைக் குழுவும் அமைக்கப்படும்.
தேர்வில் பங்கேற்குமாறு மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கிறது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அனைத்து தரப்பினருக்கும் உகந்த சூழலை உருவாக்கவும் கல்லூரி நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு நிர்வாகக் குழுகூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago