வந்தவாசி அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பள்ளி மாணவி களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழவங்கரணை கிராமத்தில் வசிக்கும் மாணவிகளில் சிலர், வந்தவாசியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள், ஒரத்தியில் இருந்து மழவங்கரணை கூட்டுச்சாலை வழியாக வந்தவாசிக்கு இயக் கப்படும் அரசு நகரப் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

அப்போது பேருந்து ஓட்டுநர் கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், மழவங்கரனை கூட்டுச்சாலை வழியாக வந்த அரசுப் பேருந்தை நேற்று சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலிலும் ஈடு பட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “மாணவிகளிடம் அரசுப் பேருந்து ஓட்டுநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், பள்ளிக்கு செல்ல மாணவிகள் அச்சப்படுகின்றனர். ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த கீழ்கொடுங்காலூர் காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் கிராம மக் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

மேலும் நிர்வாக ரீதியாக ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளும் உறுதியளித்தனர். இதையடுத்து, அரசுப் பேருந்தை விடுவித்து, சாலை மறியல் போராட்டத்தை பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்