நிலக்கரி சுரங்க விவகாரம் | சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் அளிப்பார்: உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளிப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இளைஞர் நலன் மட்டும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிப்பார்" என்று கூறினார்.

முன்னதாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE