தமிழ் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

By செய்திப்பிரிவு

கோவை: தமிழ் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம், எர்ணாகுளம்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்படும் திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06044), வரும் 5, 12-ம் தேதிகளில், திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 6, 13-ம் தேதிகளில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06043), மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

எர்ணாகுளம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046), வரும் 9, 16-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 10, 17-ம் தேதிகளில் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06045), மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதியளவு ரத்து: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில், “அரக்கோணம்-காட்பாடி ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள வாலாஜா ரயில்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (ஏப்.4) மதியம் 2.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்பட்டு வர வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12679), சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த ரயில் சென்னை சென்ட்ரலுக்கு பதில், காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்