பெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா? இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள்.
குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்?
Ø காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.
Ø நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும்.
Ø மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.
Ø ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
Ø இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.
Ø ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
போலி சுத்திகரிப்பு
தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு. சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது.
கோடையில் இது சீசன் தொழில்
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.
இது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறோம்” என்கின்றனர். தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியர், “இதனால் மொத்த நிறுவனங்களுக்கும் சேர்த்து அவப் பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் 'ஐ.எஸ்.ஐ. 2002' உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றனர்” என்றார்.
தீர்வுகள் என்ன?
250 - 300 வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது. நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது. இதை குடிநீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும். இதில் 100 முறை சோதனை செய்ய முடியும். சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர். பவுண்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது.
கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன.
பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளுங்கள்
பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டில் எந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.
எண் 1 - பாலி எத்திலின் டெர்ப்தலேட், 2 - ஹை டென்சிட்டி பாலி எத்தனால், 3 - பாலிவினைல் குளோரைடு, 4 - லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5 - பாலி புரோபைலினால், 6 - பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. 7 - ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிடப்பட்ட பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago