சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தனது 71-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு தெலங்கானா ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலை
வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
» தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
» மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட ஆயுளுடனும் நிறைவான ஆரோக்கியத்துடனும் தேசப்பணி தொடர, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆளுநர் ஆர்.என்.ரவி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு, நாட்டுக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பணியாற்ற, தம் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று, இறைவன் திருவருளோடு வாழ, மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago