சென்னை: மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, மகாவீரர் ஜெயந்தி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நாளில் தமிழகத்தில் தொன்றுதொட்டு சமணத்தை பின்பற்றி வாழ்ந்து வரும் மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரச குடும்பத்தில் பிறந்தும் செல்வச்செழிப்பை புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர்ந்த நல்லறங்களை உலகுக்கு போதித்தவர் மகாவீரர். இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளான மகாவீரர் ஜெயந்தியைப் போற்றுவோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மகாவீரர் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துக்கள். தொடக்கத்தில் பாவச் செயல்கள் இன்பம் தந்தாலும், முடிவில் துன்பமே தரும் என போதித்தவர் மகாவீரர். அவரது பிறந்தநாளில் நாடெங்கும் தர்மம் தழைக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மகாவீரரின் வாழ்க்கை முறையை கடைபிடித்தால் உலகம் அமைதியுடனும், வளத்துடனும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். இந்த இலக்கை
அடைய அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்.
» பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் எதிர்ப்பது ஏன்? - தேசிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து தமது செல்வத்தை மக்களுக்காக தானமாக வழங்கியவர். அகிம்சை நெறியை உலகுக்கு உணர்த்தியவர். அவரது பிறந்தநாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழும் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: மகாவீரரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது இல்லாத அன்பு நிறைந்த உலகத்தை உருவாக்கவும் உறுதியேற்போம்.
வி.கே.சசிகலா: மகாவீரர் பிறந்த தினத்தை மன நிறைவோடு கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை: மகாவீரரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago