சென்னை: தமிழகத்தில் நடைபெற்றுவந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற்றன. பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் இன்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை மே 5-ம் தேதி வெளியிட பள்ளிக் கல்விதுறை முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago