பயணிகள், சரக்கு போக்குவரத்து பிரிவில் தெற்கு ரயில்வே அதிக வருவாய் ஈட்டி சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட 6 கோட்டங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.

பண்டிகை, முக்கிய நாட்களில் பயணிகள் நெரிசல் இன்றி பயணிக்கும் விதமாக, கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை உயர்வால், வருவாயும் அதிகரித்துவருகிறது. 2022-2023-ம் நிதியாண்டில் 64 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலமாக ரூ.6,345 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.5,225 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

சரக்கு போக்குவரத்து பிரிவில் 2022-23-ம் நிதியாண்டில், 37.94 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச்சென்று சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ரூ.3,637.86 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 30 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE