வண்டலூர் | மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் பணி: கொளப்பாக்கம் பகுதி மக்கள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் மின்கம்பத்தை இடமாற்றம் செய்யாமல் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால்வாய் பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை செங்கல்பட்டு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலையின் கொளப்பாக்கம் பகுதியில் ஓரமாக இரும்பு மின்சார கம்பம் உள்ளது. இதனை பொருட்படுத்தாமல் கம்பத்தை நடுவே விட்டு விட்டு மழைநீர் வடிகால்வாய் அமைத்து வருகின்றனர்.

தற்போது கால்வாயின் நடுவே இரும்பு மின்சார கம்பம் உள்ளதால் அது துருப்பிடித்து விழுந்து விடும் என்ற அச்சமும், அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கால்வாய் பணி தொடங்கும் முன்னரே இரும்பு மின்கம்பத்தை இடமாற்றம் செய்துவிட்டு அமைத்திருக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு திட்ட பணிகள் நடைபெறும்போது அதிகாரிகள் செய்திருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் கால்வாயின் நடுவில் உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE