சென்னை: வீடு உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளிலும் மின் பயன்பாட்டின்போது மின்சாரத்தின் ஓட்டமும், மின் அழுத்தத்தின் ஓட்டமும் ஓரே சீராக இருக்க வேண்டும். தற்போது, அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நவீன மின் மற்றும் மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெல்டிங் மெஷின், மோட்டார் பம்ப் போன்றசாதனங்களை இயக்கும்போது மின்னழுத்தம் திடீரென அதிகரிக்கிறது.
அப்போது, மின்னழுத்த அளவும், மின்சார ஓட்ட அளவும் சீரற்ற நிலைக்கு மாறி விடுகின்றன. இது ஹார்மோனிக் சிதைவு நிலை எனப்படுகிறது. இச்சிதைவு ஏற்பட்டால் மின்விநியோகம் பாதிக்கப்படும். இதனால், மின்மாற்றிகள், பில்லர் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதனங்களில் பழுது ஏற்படும்.
எனவே, இந்த சிதைவை கட்டுப்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. இதன்படி, அதிக மின்னழுத்தம் பயன்படுத்தும் மின்நுகர்வோர் அனைவரும் தங்களின்மின்இணைப்புகளில் ஹார்மோனிக் பில்டர் என்ற கட்டமைப்பை இணைக்க வேண்டும். சர்வதேச தர அமைப்பு நிர்ணயித்ததைவிட அதிகளவு ஹார்மோனிக் சிதைவு இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
இதன்படி, 3% வரை இருந்தால் மாதாந்திர மின்கட்டணத்தில் 1%அபராதம் வசூலிக்கப்படும். அபராதம் விதித்து ஓராண்டுக்கு மேலும் பாதிப்பு தொடர்ந்தால்மின்விநியோகம் துண்டிக்க ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
» டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு - திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்பு
» 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago