சென்னை: சென்னையில் ரூ.4,400 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைப்பதற்கான உரிமையை வாபாக் நிறுவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஆலை தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மெடிட்டோ ஓவர்சீஸ் நிறுவனத்துடன் இணைந்து வாபாக் மேற்கொள்ள உள்ளது.
இது சென்னையில் அமையும் நான்காவது கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை ஆகும். கடல் நீரை குடிநீராக்கும் பிரிவில் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஆலையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
» மீண்டும் ஊரடங்கு என்பது வெறும் வதந்தி - சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்
» 8 புதிய மாவட்டங்கள் உருவாக்க பரிசீலனை - முதல்வர் முடிவெடுப்பார் என தகவல்
வாபாக் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனம் ஆகும். நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தில் முக்கிய நிறுவனமாக இது உள்ளது. இந்நிலையில் சென்னையில் மிகப் பெரும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஆலையின் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் செயல்பாட்டுப் பணிகளை வாபாக் நிறுவனமே மேற்கொள்ளும். இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதி வழங்குகிறது.
இந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்தால், சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் தினசரி அளவு 750 மில்லியன் லிட்டர் ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago