ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தரிசனம் செய்தார்.
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி 50-வது ஆண்டு பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 60-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் வந்தார். நேற்று காலை ராஜபாளையத்தில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தனது மனைவி லட்சுமி ரவியுடன் சென்று தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரிய பெருமாள், நரசிம்மர், பெரியாழ்வார் சந்நிதிகளில் ஆளுநர் சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஆண்டாள் ரெங்க மன்னார் படம், ஆண்டாள் சிலை, கோபுரம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
» ஓசூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு - 88-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
» சாதி, மத உணர்வை தூண்டும் வகையில் எழுத கூடாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், கோயில் அறங்காவலர் ரவிச்சந்திரன், அறநிலையதுறை துணை ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் முத்துராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago