தருமபுரி: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வைக் கண்டித்து வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், டூரிஸ்ட் வேன் சங்கம், நகர லாரி உரிமையாளர் சங்கம், டாக்ஸி கார் சங்கம், மினி டெம்போ லாரி சங்கம் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, லாரி உரிமையாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நாட்டான் மாது தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் பேசியதாவது: டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வைத்து தொழிலில் ஈடுபடுவோர் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சுங்கச்சாவடிகளில் ஏற்கெனவே அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒப்பந்த காலம் முடிந்த சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் கூட தொடர்ந்து சுங்கச் சாவடிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப் பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. இதனால் வாகனங்களை நம்பி தொழிலில் ஈடுபடுவோர் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி தொழில் நசிவடையும்.
எனவே, சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வை ரத்து செய்வதுடன், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச் சாவடிகளை ரத்து செய்ய வேண்டும், என்றனர். ஆர்ப்பாட்டத்தில், வாகன உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தால் தொப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago