உத்திரமேரூர் அருகே பழமையான பெருமாள் கோயிலில் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் பழமை வாய்ந்த அப்பன் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ உட்பட பாஜகவினர் சிலர்சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு கோயில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் மூலிகை செடிகளை நட்டனர்.

பின்னர் அங்கிருந்த பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில மாணவர்கள் தங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்ற னர். இதுகுறித்து தங்கள் பகுதி உள்ளாட்சிப் பிரிதிநிதிகளிடம் கேட்டால் பேருந்து இல்லாவிட்டால் லாரியில் செல்லுங்கள் என்று கூறுவதாக மாணவி ஒருவர் தெரிவித்தார்.

அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியிடம் உடனடியாக இந்த கிராமத்துக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கூறினார். மேலும் பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவதை தடுக்கவும் காவல்துறைக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதில் எஸ்பி சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்