சென்னை: சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அன்புமணி: இந்தியாவின் ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளில் 10 சதவீதத்துக்கு மேல் தமிழகத்தில்தான் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் 77 சதவீதம் சாலைகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இக்கட்டண உயர்வுடன் சேர்த்தால் கார்களில் பயணிக்கஒரு கிமீக்கு ரூ.1.52 சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகம். சுங்கச்சாவடிகளில் சீர்திருத்தங்களை செய்யாமல், சாலைகளை மேம்படுத்தாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மக்களின் தலையில் சுமை
இரா.முத்தரசன்: தனியார் நிறுவனங்கள் நாடெங்கும் சுங்கச் சாவடிகள் அமைத்து அதிகளவு கட்டணங்கள் வசூலித்து வருகின்றன. ஆண்டுக்கு 2 முறை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, இன்று (ஏப்.1) முதல்சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தோடு கூடுதலாக ரூ.60 வரை செலுத்த வேண்டும்.
தரமான சாலைகள் அமைக்காமல், தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மக்களின் தலையில் சுமை ஏற்றும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். சுங்கச்சாவடிகளை நீக்கி, மக்கள் சுதந்திரமாக பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago