அரசு நிறுவன கொள்முதல்களை மின்னணு முறையில் மேற்கொள்ள உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து அரசு மற்றும் பொது நிறுவனங்களின் கொள்முதல்களை மின்னணு முறையில் மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏப். 1-ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கு “மின்னணு கொள்முதல் முறை’’ கட்டாயமாக்கப்படும் என்றும், இதற்காக ஒப்பந்தப்புள்ளி விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, புதிய ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை https://tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளுமாறு அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த மின்னணு இணையதளம், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு இணங்க முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்களால் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்தல், ஒப்பந்தப்புள்ளிகள் திறத்தல், தேர்வு பெற்றவர்களுக்கு ஆணைக் கடிதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் இந்த இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும். இதனால், அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி விவரங்களை அறிய முடியும். மேலும், இணையதளத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அறிக்கையாகப் பதிவுசெய்யப்படும். ஒப்பந்தப் புள்ளி திறப்பு இணையம் மூலமாக ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும். பங்கேற்கும் அனைத்து ஒப்பந்ததாரரும் இதைப் பார்வையிடலாம்.

ஏப். 1-ம் தேதி முதல் (நேற்று) இந்த இணையதள முறையைப் பின்பற்றாமல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டால், அது விதிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்