சென்னை: தென் இந்தியப் பகுதிகளின் மேல்வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு - மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்.1-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப். 2, 3, 4-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 31 (நேற்று) காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 5 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, பொள்ளாச்சி, வால்பாறை, நீலகிரி மாவட்டம் பார்வூட், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழைபதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago