சென்னை: போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஓய்வு வயதைக் குறைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் முதல்வருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன் அனுப்பிய கடிதம்: அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு வயது உயர்த்தப்பட்ட நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு வயதைக்குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேநேரம், இந்த ஓய்வுவயதை முன்னிறுத்தியே ஊழியர்கள் வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றுக்கான தவணையைச் செலுத்திவருகின்றனர். போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெறும் நாளில்பணப்பலன் வழங்கப்படுவதில்லை. இதனால் ஓய்வு வயதைக் குறைத்தால் கடனுக்கான தவணைசெலுத்த முடியாமல் தவிப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் உள்ளனர்.
உடல் நலப் பாதிப்பு காரணமாக ஓய்வு வயதைக் குறைப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தகைய பணியாளர்களுக்கு இலகுபணி அல்லது மாற்றுப் பணி வழங்கலாம். அதேநேரம் கடும் உடல் பாதிப்பு இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற நினைத்தாலும் பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படுவதில்லை. எனவே, விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கும் அன்றைய தினமே பணப் பலனைவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago