கீழ்ப்பாக்கத்துக்கு கே.நாராயணசாமி: 7 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய டீன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய டீன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழகசுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கே.நாராயணசாமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரசி ஸ்ரீவத்சன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜி.ஆர்.ராஜஸ்ரீ, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை டீனாகவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் எம்.பூவதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மயக்க மருந்தியல் துறைபேராசிரியர் எல்.பார்த்தசாரதி,செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைநோய்க்குறியியல் துறைபேராசிரியர் எஸ்.பாப்பாத்தி,வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாகவும், அரசு ஸ்டான்லி மருத்துவமனை இரைப்பை கல்லீரல் துறை பேராசிரியர் எம்.எஸ்.ரேவதி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்