புதுச்சேரி: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘உலகப் பொதுமறையாம் திருக்குறள் நமது நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஓர் அற்புத நூல். 14 ஐரோப்பிய மொழிகளிலும், 10 ஆசிய மொழிகளிலும், 14 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட ஓர் உன்னத நூல். அதுமட்டுமல்லாமல் இந்த நூல் எந்த மதத்துக்கும், எந்த கடவுளுக்கும் கட்டுக்குள் அடங்காத அனைவருக்கும் பொதுவான எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சிறந்த மறைநூல்.
ஓர் மொழிக்குள் இந்த திருக்குறளை சுருக்கவிட முடியாது. மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரைதான் இந்த திருக்குறள் பொதுமறை. வள்ளுவருக்கு சிறப்பு செய்யும் வண்ணம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்’ என்று திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக, காங்கிரஸ், பாஜக, சுயேட்சை எம்எல்ஏக்கள் பேசினர். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசு தீர்மானமாக ஏற்று நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, "வாழ்வில் மனிதன் செம்மையாக, சிறப்பாக இருக்க வேண்டும், வாழ்வை அமைதியாக நடத்திச் செல்ல வேண்டும் என்று சொன்னால் திருக்குறள் என்ற ஒரு நூலை படித்தாலே போதும். திருக்குறளில் இல்லாததே இல்லை. இரண்டு வரியில் அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட நூல்தான் திருக்குறள்.
நமது பிரதமர் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் திருக்குறளை சுட்டிக்காட்டாமல் இருக்கவே மாட்டார். இப்படிப்பட்ட திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதில் எந்தவித தயக்கமும் இல்லை. இதனை அரசு தீர்மானமாக எடுத்துக்கொண்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பு செய்து நாம் பெருமை அடைவோம்" என முதல்வர் கூறினார்.
இதையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அனிபால் கென்னடியிடம் தனிநபர் தீர்மானத்தை வாபஸ் பெற கேட்டுக் கொண்டார். இதையேற்று தீர்மானத்தை அவர் வாபஸ் பெற்றார். தொடர்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago