தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை முகாமில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

முதுமலை: தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் தாயைப் பிரிந்து, முதுமலைக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தாயைப் பிரிந்த 5 மாத ஆண் குட்டி யானை தனியாக திரிந்தது. அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், விவசாய கிணற்றில் தவறி விழுந்த அந்த குட்டி யானை காயமடைந்தது. இதனால், தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, குட்டி யானையை வனத்துறை ஊழியர் மகேந்திரன் ஒரு வாரம் பராமரித்தார்.

இதற்கிடையே, குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பி பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. இந்த யானையை பராமரிக்கும் பணியை ரகு, அம்மு ஆகிய யானைகளை வளர்த்து வந்த ஆஸ்கர் புகழ் பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த குட்டி யானை இன்று மரணம் அடைந்தது. நீண்ட நேரம் மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றியும் குட்டி யானை உயிரிழந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்