சென்னை: சென்னை - கோவை இடையே வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.
சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 12-வது வந்தே பாரத் ரயில் சென்னை - கோயம்புத்தூர் இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்.8-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று (மார்ச் 30) தொடங்கியது. சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, கோயம்புத்தூரை முற்பகல் 11.40 மணிக்கு அடையும். அங்கிருந்து, நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இருமார்க்கமாகவும் இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சோதனை ஓட்டத்தில், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago