சென்னை: சட்டப்பேரவையில் இந்த நிதிஆண்டுக்கு ரூ.26,353 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில், இந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:
துணை மதிப்பீடு நோக்கம்: இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.26,353 கோடி நிதி ஒதுக்கத்துக்கு வகை செய்கின்றன. இதில் ரூ.19,777 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.3,642 கோடி மூலதன கணக்கிலும், ரூ.2,934 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.
இந்த 2022-23-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் கடந்த2022 அக்.18-ம் தேதி தாக்கல்செய்யப்பட்ட பிறகு, புதியபணிகள், புதிய துணைப் பணிகள் குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்ட செலவினங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலை பெறுவது இந்த துணை மதிப் பீடுகளின் முக்கிய நோக்க மாகும்.
» ஆந்திராவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
» ராகுல் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுப்போம் - சாவர்க்கர் பேரன் ரஞ்சித் எச்சரிக்கை
கூட்டுறவு துறைக்கு நகைக் கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு போக்குவரத்து செலவினங்களுக்காக உணவுமானியத்தில் ரூ.2,140 கோடி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வுகால பலன்களுக்காக ரூ.1,032 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஆவினுக்கு ரூ.150 கோடி: பால்வள துறையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்துக்கு (ஆவின்) வட்டியில்லா கடனாகரூ.150 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர்வழங்கல் துறையில், ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம், சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்தின் நிலுவை செலவினங்களுக்காக ரூ.1,393 கோடி வழங்கப்பட் டுள்ளது. இவ்வாறு நிதி அமைச்சர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago