சிறு, குறு நிறுவனங்கள் துறை சார்பில் மாவட்டம் தோறும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: குறு, சிறு நடுத்தரத் தொழில்கள்துறை சார்பில், மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் ரூ.15 கோடியில் கட்டப்பட்டபுதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் ஒவ்வொருமாவட்டத்திலும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில்சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘மாவட்ட ஏற்றுமதி மையங்கள்’ உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம்தோறும் வர்த்தக மேம்பாட்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஏற்றுமதி ஊக்குவிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: தொடர்ந்து, தமிழக அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டுக்கான அறிவுசார் பங்குதாரராக நியமிக்கப்பட்டுள்ள அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தைசெயல்படுத்தும் விதமாக, தமிழகஅரசின் தொழில் ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், மற்றும் அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தின் பேராசிரியர்கள் நமன் தேசாய், ஜோஷி ஜேக்கப் ஆகியோர் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அளவொப்புமை ஆய்வகங்களுக்கான அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் ரூ.1.32 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைவசதிகள், குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் ரூ.3.29 கோடியில் நிறுவப்பட்டுள்ள ஊட்டி டீ-யின்அதிநவீன கலவை மற்றும் சிப்பம்கட்டும் அலகு,

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிநிறுவனம் மூலம் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் ரூ.1.35 கோடியில் கட்டப்பட்டுள்ள பொதுவசதி மையக் கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில் ரூ.2.93 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,

மற்றும் காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ.2.72 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அதே தொழிற்பேட்டையில் ரூ.2.92 கோடியில் மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட கட்டிடங்கள் என ரூ.15 கோடி செலவில் முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

தொழிற்பேட்டைகளில் பட்டா: மேலும், நெடுங்காலமாக தொழிற்பேட்டைகளில் பட்டா பெற காத்திருந்த ஒதுக்கீட்டாளர்களுக்கு சிறப்பு முன்னெடுப்பு மூலம் பட்டா வழங்கும் விதமாக முதற்கட்டமாக 210 மனைதாரர்களுக்கு பட்டா வழங்குவதை தொடங்கி வைத்து,5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறையின் செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்