பழனிசாமிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி: அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமிக்கு பாமக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல், தமிழகத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி, எதிர்காலம் இவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்த பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பு, அதிமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் நல்ல சூழலை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மேலும், நாடாளுமன்றத்துக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்புவதற்கு நல்வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய நீதிக் கட்சிதலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி,பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர் தனபாலன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்