சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்களின் ரூ.308கோடி மதிப்புள்ள பணப்பலன்களுக்கான காசோலைகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வழங்கி நடவடிக்கையைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020-ம் ஆண்டு மே முதல் 2022 மார்ச் மாதம் வரை விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 2,867பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதியஒப்படைப்புத் தொகை உள்ளிட்டபணப் பலன்களாக ரூ.551.12கோடியை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, முதற்கட்டமாகக் கடந்தாண்டு டிச. 1-ம் தேதியன்று இதில், 1,241 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடியை போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.
தற்போது 1,626 பேருக்கு ரூ.308.45 கோடி பணப் பலன்கள் வழங்கப்படுகின்றன. நேற்று (மார்ச் 27) தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சா.சிவசங்கர், போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 23 விருப்ப ஓய்வு பெற்ற, இறந்தபணியாளர்களின் பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார்கள். தொடர்ந்து மற்ற 1,603 பணியாளர்களுக்கும் அந்தந்தப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாகக் காசோலைகள் வழங்கப்படும்.
» பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு: பிரதமர் மோடி, கேரள முதல்வர் இரங்கல்
» ‘வாழ்க்கை பாடம்’ ஹேஷ்டேக் பதிவு - விஷ்ணு விஷால் திடீர் விளக்கம்
நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால், அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago