ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3-ம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதிவருகிறது.

இதை முன்னிட்டு, அடுத்தாண்டு ஜூன் 3-ம் தேதி வரை திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவெடுக்கப்பட் டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘ஏற்கெனவே ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தில் மேலும் ஒரு கோடி உறுப்பினர் களை சேர்க்கும் முயற்சியை ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடுதோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்திடுவோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, திமுகவில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள், பிற அணிகள், அமைப்புகளின் செயலாளர்கள் என அனைவரும் உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கியுள்ள னர். இதற்காக நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி, குழுக்களை அமைத்து இப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இரண்டு மாதங்களில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்காக சேர்க்கை முகாம்கள் நடத்த உள்ளோம். இதுதவிர, தெருமுனைப் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் மூலம் திமுகவின் வரலாறு, கொள்கை மற்றும் அரசின் திட்டங்கள், மக்களுக்கு அவை அளிக்கும் பயன்கள், பட்ஜெட் திட்டங்களின் பலன்களை எடுத்துக் கூறி அவர்களை திமுகவில் உறுப்பினராக்குவதே எங்கள்பணி.

உறுப்பினர் சேர்க்கையை இயக்கமாக மாற்றி இளைஞர்களை அதிகளவில் சேர்க்க உள் ளோம். இது தவிர, நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளான பூத் கமிட்டி அமைத்தல், அதற்கு பூத் ஏஜென்ட்களை தேர்வு செய்தல் போன்ற பணிகளையும் விரைவாக முடிக்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

தொகுதி வாரியாக ஏற்கெனவே பட்டியல் தயாரித்து அனுப்பப்பட்டது. அந்த பட்டியலில்உள்ளவர்களை இறுதிசெய்து தரவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், சட்டம் அறிந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்